உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

ஓசூர், ஜன.9: ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக மாநகராட்சி சுகாதார பிரிவில் பணிபுரியும் துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணி மேற்பார்வையாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். இதில், ஓசூர் மாநகரம் மற்றும் ஒன்றிய பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் உள்ளிட்டோர் மேற்கொண்ட, பல்வேறு உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை பாராட்டி பரிசு வழங்கினார். இதில் மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன், மாநகராட்சி சுகாதார அலுவலர் அஜிதா, சூளகிரி, கெலமங்கலம், தளி ஒன்றிய பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜசேகர், பிரகாஷ், சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி துப்புரவு அலுவலர் அன்பழகன் நன்றி கூறினார்.

The post உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: