கல்வராயன் மலை பகுதியில் அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை

சென்னை, ஜன. 9: கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தை அடுத்து கல்வராயன் மலைப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகள் நிலை குறித்த கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அவர்கள் கல்வி கற்பதற்காக விலையில்லா சைக்கிள், பாட புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

The post கல்வராயன் மலை பகுதியில் அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: