- யூஜிசி
- யூனியன் அரசு
- அஇஅதிமுக
- சண்முகம்
- சென்னை
- முன்னாள்
- அமைச்சர்
- சி.வி ஷண்முகம்
- சுயவிவரம்
- தமிழ்
- தின மலர்
சென்னை: யுஜிசி விதிகள் திருத்தத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; யுஜிசி விதிகள் திருத்தம் என்பது மாநிலங்கள் மீது தொடங்கப்படும் யுத்தம் என சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் இனத்தை அழிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டியுள்ளார். மறைமுகமாக செய்யப்பட்டுவந்த இந்தி திணிப்பு, தற்போது நேரடியாகவே திணிக்க வாய்ப்புள்ளது.
மேலும், உயர்கல்வியின் அதிகாரத்தை முழுவதும் ஆளுநரிடம் அளிக்கும் செயல்தான் யுஜிசி விதி திருத்தம். ஆசிரியர்கள் அல்லாதவர்களையும் துணைவேந்தராக நியமிக்கலாம் என்ற வகையில் யுஜிசி புதிய விதி உள்ளது. பல்கலை.யில் 10% பேரை மட்டுமே ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை முழுவதும் நீக்கியது பேராபத்து. யுஜிசி விதிகள் திருத்தம் மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என சி.வி.சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.
The post யுஜிசி விதிகள் திருத்தம்.. தமிழ் இனத்தை அழிக்க ஒன்றிய அரசு முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம்!! appeared first on Dinakaran.