×

ஒரே நாடு ஒரே தேர்தல் இன்று கூட்டுக்குழு ஆலோசனை

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகின்றது. 39 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராக பாஜ எம்பி பிபிசவுத்ரி உள்ளார். கூட்டத்தில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அதிகாரிகள், குழு உறுப்பினர்களுக்கு முன்மொழியப்பட்ட மசோதாவின் விதிகள் குறித்து விளக்குவார்கள்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் இன்று கூட்டுக்குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : One ,Nation ,One Election Joint Committee Meeting ,New Delhi ,One Nation ,Parliamentary Joint Committee ,Nation, One Election Joint Committee Meeting ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான...