தமிழ்நாட்டை பின்பற்றி சாலை விபத்தில் சிக்கினால் இனிமேல் இலவச சிகிச்சை: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் சாலை விபத்தில் சிக்கினால் முதல் 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்கும் இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அந்த திட்டத்தை இப்போது ஒன்றிய அரசு நாடு முழுவதும் விரிவுபடுத்த உள்ளது.

இதுபற்றி ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி கூறியதாவது: நாடு முழுவதும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை அளிக்க மார்ச் மாதத்திற்குள் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு விபத்து ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வழங்கப்படும். விபத்து நடந்த நாளிலிருந்து அதிகபட்சமாக 7 நாட்களுக்கு ஒரு நபருக்கு ஒரு விபத்துக்கு அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post தமிழ்நாட்டை பின்பற்றி சாலை விபத்தில் சிக்கினால் இனிமேல் இலவச சிகிச்சை: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: