×

வளையக்கரணை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், வளையங்களை ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு, 5 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதையடுத்து, ஊராட்சியை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற கோலப்போட்டி, ஓட்ட பந்தயம், தண்ணீர் நிரப்புதல், மியுசிக் சேர் உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல், வளையங்கரணை அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பள்ளி ஆசிரியர்கள் ஜோஸ்பின்நிர்மலா, சீனிவாசன், நம்பி, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post வளையக்கரணை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Equality Pongal ,Vayakaranai Panchayat ,Sriperumbudur ,Kundrathur Union ,Kanchipuram District ,Equality Pongal festival ,Panchayat administration ,Panchayat Council ,Rajan ,
× RELATED அறந்தாங்கியில் சமத்துவ பொங்கல் விழா