பூந்தமல்லி: பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 200 ரூபாய் பார்க் பகுதியில் உள்ள சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு சந்தை வருகின்ற 9ம்தேதி நள்ளிரவில் தொடங்கி 16ம்தேதி வரை நடைபெறுகிறது. இதில் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிறப்பு சந்தை அமைக்கும் பகுதியை அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது சிறப்பு சந்தையில் வெளிமாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கரும்பு ஏற்றிவரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடம் உள்ளதா, வியாபாரம் செய்வதற்கு போதிய இடங்கள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளுக்கு தேவையான கழிவறை மற்றும் குடிதண்ணீர் வசதி கண்டிப்பாக ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமையும் இடம் ஆய்வு appeared first on Dinakaran.