×

மீண்டும் கழுகுகள் வர வேண்டியும், உலக நன்மைக்காகவும் வேதகிரீஸ்வரர் கோயிலில் சூட்சம கிரிவலம்: 15 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

 

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் மீண்டும் கழுகுகள் வரவேண்டியும், உலக நன்மைக்காகவும் சூட்சம கிரிவலம் நடந்தது. அதில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயில் உலக பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்நிலையில், இக்கோயிலுக்கு மீண்டும் கழுகுகள் வர வேண்டியும், உலக நன்மைக்காகவும் வேதமலை வல பெருவிழா குழு சார்பில் ஆண்டுதோறும் சூட்சம கிரிவலம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு வேதமலை வல பெருவிழா குழுவின் செயலாளர் அகஸ்திய கிருபா அன்பு செழியன் தலைமையில் நேற்று அதிகாலை சூட்சம கிரிவலம் நடந்தது. மலையடிவாரத்தில், விசேஷ வேள்விகள் மற்றும் பூஜைகளுடன் துவங்கிய சூட்சும கிரிவலத்தில் திருக்கழுக்குன்றம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

The post மீண்டும் கழுகுகள் வர வேண்டியும், உலக நன்மைக்காகவும் வேதகிரீஸ்வரர் கோயிலில் சூட்சம கிரிவலம்: 15 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Vedagireeswarar temple ,Thirukkazhukundram ,
× RELATED அரசு பள்ளியை சூறையாடிய விவகாரத்தை...