திமுகவுடன் எங்கள் பயணம் தொடரும்: மார்க்சிஸ்ட் புதிய செயலாளர் சண்முகம் பேட்டி

விழுப்புரம்: திமுகவுடன் எங்கள் பயணம் தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் கூறினார். விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி: ஒன்றிய பாஜக அரசு மதவெறி மட்டுமல்ல, மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பது, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவது, அரசியல்சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளுக்கு மாறாக நடந்துகொள்வது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் வலிமைமிகுந்த போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுப்பது என்று தீர்மானித்திருக்கிறோம்.

உழைக்கும் மக்களுக்கு எதிரான, பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தொடர்ந்து நாங்கள் மேற்கொள்வோம். தமிழகத்தில் மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பயணிக்கும். அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஜனநாயக முறையில் எதிர்ப்புகளை தெரிவிப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நலன்சார்ந்த பிரச்னைகளில் சமரசமற்ற போராட்டங்களை நடத்துவதன் மூலமாகத்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post திமுகவுடன் எங்கள் பயணம் தொடரும்: மார்க்சிஸ்ட் புதிய செயலாளர் சண்முகம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: