சிவகாசி பகுதியில் ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்

 

சிவகாசி, ஜன. 5: சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மற்றும் அதனைச் சுற்றி உட்கடை கிராமங்களில் கோயில் விழாக்கள், வீட்டு விஷேசங்கள் என மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் நிகழ்வுகள் நடக்கின்றது. அப்போது ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதிக சத்தத்துடன் அதிகாலை முதல் இரவு 11 மணி வரை ஒலி பெருக்கிகளை இயக்குகின்றனர். இதில் ஒரு ரேடியோ மைக் உரிமையாளருக்கும், அந்த பகுதியில் உள்ள மற்றொரு ரேடியோ மைக்செட் உரிமையாளருக்கும் தொழில் போட்டிகள் ஏற்படுகிறதாம். இதனால் அவர்களுடைய இமேஜ் பாதிப்பதாக கூறி, ஒருவருக்கொருவர் அருகருகே விஷேசங்களுக்கு ஒலிபெருக்கிகளை அதிக சத்தத்துடன் இயக்குகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் என அதிகளவில் பாதிப்படைகின்றனர். ஒலிப்பெருக்கியின் சத்தம் குறிப்பிட்ட அளவில் தான் ஒலிக்கச் செய்யவேண்டும் என விதிமுறைகள் இருந்தும் இந்த மாதிரி நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. ஆகையால் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்நிலையங்களில் உரிய அனுமதி பெற்று பயன்படுத்தவேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post சிவகாசி பகுதியில் ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: