- பட்டாசு தொழிற்சாலை
- விருதுநகர்
- அப்பையநாயக்கன்பட்டி
- சாத்தூர்
- விருதுநகர் மாவட்டம்
- பொம்மையபுரம்
- வச்சக்காரப்பட்டி
- விருதுநகர்…
- தின மலர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.இந்த பட்டாசு ஆலையில் உள்ள 35 அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் பட்டாசு உற்பத்திக்கான வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது உராய்வு காரணமாக காலை 9.40 மணி அளவில்திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாயின. ஆலையில் பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக
உயிரிழந்தனர்.
The post பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.