மன்மோகன் சிங்குக்கு சென்னையில் முழு உருவ சிலையுடன் மணிமண்டபம்: ஐஎன்டியுசி கோரிக்கை

சென்னை: சென்னை ராயப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தலைமை அலுவலகத்தில் மறைந்த பிரதமர் மன்மோகன் சிங் பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செகரட்டரி ஜெனரல் மு.பன்னீர் செல்வம் மன்மோகன் சிங் படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் வி.சி.முனுசாமி, ந.க.நாராயணசாமி, ஜி.ஜெயபால், ராயபுரம் பி.கோபிநாத், ஆலந்தூர் கே. நாகராஜ்,பி.எஸ்.என்.எல். எஸ்.லிங்கமூர்த்தி, துறைமுகம் ரவி, செல்வம், வி. முனுசாமி ஏ.கல்யாணராமன்,சரவணன், நிர்மலாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டுக்கு ஏராளமான திட்டங்களைகொடுத்தும் வளர்ச்சி பாதைக்கு வழிவகுத்தவருமான மன்மோகன் சிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் முழு உருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

The post மன்மோகன் சிங்குக்கு சென்னையில் முழு உருவ சிலையுடன் மணிமண்டபம்: ஐஎன்டியுசி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: