×

8 ஆண்டுக்கு பின் இறுதி கட்டத்தை எட்டிய ஏஞ்சலினா ஜோலி – பிராட் பிட் விவாகரத்து: ஹாலிவுட்டில் பரபரப்பு

நியூயார்க்: 8 ஆண்டுக்கு பின்னர் ஏஞ்சலினா ஜோலி – பிராட் பிட் ஜோடியின் விவாகரத்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் ஹாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹாலிவுட் பிரபலங்களான நடிகை ஏஞ்சலினா ஜோலி (49) மற்றும் நடிகர் பிராட் பிட் (61) ஆகியோர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் கடந்த 2014ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இருவருக்குள்ளும் நீண்டநாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கடந்த 2016ல் தம்பதிகள் விவாகரத்து கோரிய நிலையில், நீண்ட சமரச முயற்சிகளுக்கு பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்வதாக கூறப்பட்டது.

ஆனால் இருவருக்குள்ளும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தற்போது தம்பதிகள் இருவரும் மீண்டும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து ஜோலியின் வழக்கறிஞர் ஜேம்ஸ் சைமன் அளித்த பேட்டியில், ‘கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது கணவரிடம் இருந்து ஏஞ்சலினா விவாகரத்து கோரினார். குழந்தைகளை பராமரிப்பதில் இருவருக்குள்ளும் பிரச்னை இருந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்குகள் எதுவும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. நீதிபதியின் ஒப்புதல் பெறவேண்டியுள்ளது. இதுதொடர்பாக பிராட் பிட்டின் வழக்கறிஞருடன் பேசியுள்ளோம். குழந்தைகள் பராமரிப்பு மற்றும் சொத்துகள் பகிர்ந்து கொடுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது’ என்றார்.

The post 8 ஆண்டுக்கு பின் இறுதி கட்டத்தை எட்டிய ஏஞ்சலினா ஜோலி – பிராட் பிட் விவாகரத்து: ஹாலிவுட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Angelina Jolie ,Brad Pitt ,Hollywood ,New York ,
× RELATED கணவரை பிரிகிறார் ஏஞ்சலினா ஜூலி