×

தமிழ்நாட்டில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தென்மேற்கு பருவமழை காலத்தில் 18%மும், வடகிழக்கு பருவமழை காலத்தில் 33% இயல்பைவிட அதிகம் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபரில் 214 மி.மீ., நவம்பரில் 140 மி.மீ, டிசம்பரில் 235 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தமாக 590 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மாவட்ட அளவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் நெல்லையில் இயல்பை விட 265 மி.மீ. அதிக மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவமழை அதிகளவில் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 6 மாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டில் 6 புயல்கள் உருவாகின. தென் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருக்கிறது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். தமிழ்நாட்டில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது; அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும் என்று கூறினார்.

The post தமிழ்நாட்டில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nadu ,Balachandran ,Chennai ,Tamil Nadu ,Meteorological Centre South ,Zone ,
× RELATED பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு...