×

ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணியில் கேப்டனாக பும்ரா தேர்வு!

ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணியில் கேப்டனாக இந்திய வீரர் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். AUS TEST TEAM OF THE YEAR: பும்ரா (C), ஜெய்ஸ்வால், டக்கெட், ரூட், ரச்சின், ப்ரூக், கமிந்து மெண்டிஸ், அலெக்ஸ் கேரி (WK), மேட் ஹென்றி, ஹேசல்வுட், கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், வர்ணனையாளர்களும், நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணிகளை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம். அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் தேர்வு செய்த 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது.

இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய வீரர்களை கொண்டு அணியை உருவாக்கியுள்ளது. அதில் இந்திய வீரர்களான ஜெய்ஸ்வாலை தொடக்க ஆட்டக்காரராகவும், பும்ராவை கேப்டனாகவும் தேர்வு செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான கம்மின்சை ஒரு வீரராக கூட தேர்வு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணியில் கேப்டனாக பும்ரா தேர்வு! appeared first on Dinakaran.

Tags : Bumrah ,AUS ,PUMRA ,JAYSWAL ,DUCKET ,RUDD ,RACHIN ,BROOKE ,KAMINDU MENDIS ,ALEX ,Dinakaran ,
× RELATED டீம் ஆப் தி இயர் 2024 கேப்டனாக பும்ரா...