மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,701 கனஅடி

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு நேற்று 8வது நாளாக விநாடிக்கு 3,500 கனஅடியாக நீடித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2,886 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 2,701 கனஅடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 500 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.63 அடியிலிருந்து 119.72 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.26 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,701 கனஅடி appeared first on Dinakaran.

Related Stories: