பஸ்வான் கட்சி பிரமுகர் வீட்டில் ஈடி சோதனை

பாட்னா: பீகாரில் மணல் கொள்ளை வழக்கில் லோக் ஜனசக்தி(ராம் விலாஸ் பஸ்வான்) கட்சி பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பீகாரில் சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரத்தில் நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே கடந்த மார்ச் 10ம் தேதி பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தலைவருமான லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய கூட்டாளியான சுபாஷ் யாதவை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில் சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பான பண மோசடி வழக்கில் லோக் ஜனசக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சியை சேர்ந்தவராக கூறப்படும் ஹூலாஸ் பாண்டே வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அவருக்கு சொந்தமாக பாட்னா மற்றும் பெங்களூருவில் உள்ள இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும் சில அரசியல் பிரமுகர்கள் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

The post பஸ்வான் கட்சி பிரமுகர் வீட்டில் ஈடி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: