சென்னை : லண்டன் பயணத்திற்கு பிறகு என் பாதை தெளிவாக ஆரம்பித்திருக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “முருகப்பெருமானிடம் எங்கள் வேண்டுதலை, 6 சாட்டையடிகளாக சமர்ப்பித்தேன். சாட்டையில் அடிப்பது என்பது தமிழ் மரபில் உள்ளது. தேர்தல் தோல்வி எனக்கு பெருமைதான்; 2026-ல் தோல்வி வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். லண்டன் பயணத்திற்குப்பிறகு என்னுடைய பாதை தெளிவாக ஆரம்பித்திருக்கிறது; அரசியலை தூரமாக நின்று பார்க்கும்போது நிறைய புரிதல் கிடைத்திருக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post 2026-ல் தோல்வி வந்தாலும் ஏற்றுக்கொள்வேன் :அண்ணாமலை appeared first on Dinakaran.