சாத்தூர் நகர்மன்ற கூட்டம்

 

சாத்தூர், டிச. 27: சாத்தூர் நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 24 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் சாத்தூர் நகர் பகுதியல் நகராட்சி நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு பைப்பில் வழங்கப்படும் குடிதண்ணீர் கலங்கலாக இருப்பதால் அதை பயண்படுத்த முடியவில்லை எனவே சுத்தமாக தண்ணீர் வழங்க அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களிடமும் ஆலோசனை செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் சிதம்பரம் நகரில் பல இடங்களில் சாலை போடாமல் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் சிரமத்துடன் செல்லுகின்றனர்.எனவே உடனடியாக சாலை வசதியை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர் விரைவில் அனைத்து கோரிக்கைக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

The post சாத்தூர் நகர்மன்ற கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: