அசுரவேக தனியார் பஸ்களால் ஆபத்து

 

விருதுநகர், டிச. 27: மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்டை விட்டு கிளம்பியதும் மெயின் ரோட்டை பிடித்ததும் கண் மூடித்தனமான வேகத்தில் சில தனியார் பஸ்கள் இயங்குகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் தனியார் பஸ்களை கடந்து செல்கின்றனர். தனியார் பஸ்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை.

தனியார் பஸ்கள் மீது வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், கூடுதலான தனியார் பஸ்களின் வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டருக்கு மேல் உள்ளதாக பஸ்ஸில் பயணிக்கும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.தொடர்ந்து அதிக வேகத்தில் செல்லும் தனியார் பஸ் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அசுரவேக தனியார் பஸ்களால் ஆபத்து appeared first on Dinakaran.

Related Stories: