ஆர்.எஸ்.மங்கலம், டிச.27: திருப்பாலைக்குடி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறித்தது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி அருகே கொத்தியார்கோட்டை கிராமத்தை சேர்ந்த மல்லுராஜா மனைவி மாரி(67). நாகனேந்தல் முனியய்யா கோவில் சாலை அருகே விவசாய தோட்டத்தில் களை எடுத்து விட்டு ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
அப்பகுதியில் இருந்த கொட்டகையில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 3 பேர், மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து மாரி திருப்பாலைக்குடி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
The post மூதாட்டியிடம் செயின் பறிப்பு appeared first on Dinakaran.