அமித்ஷா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: விஷ்ணு பிரசாத் எம்பி பேட்டி

கடலூர்: கடலூரில் காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் நேற்று அளித்த பேட்டி: அம்பேத்கர் குறித்து மனதளவில் உள்ள வெறுப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சின் மூலம் வெளிவந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில், நான் அவ்வாறு பேசவில்லை என்று அமித்ஷா கூறுகிறார். அமித்ஷா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட அம்பேத்கரை இழிவுபடுத்துவதை காங்கிரஸ் கட்சி ஏற்று கொள்ளாது.

இந்தியாவில் அதிக சுங்கச்சாவடிகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் போதுமான கட்டமைப்புகள் இல்லை. வாகனம் வாங்கும்போது சாலை வரி விதிக்கின்றனர். தொடர்ந்து சுங்கச்சாவடியிலும் வசூல் செய்கின்றனர். வணிக ரீதியான வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கலாம். காலம் கடந்தும் பல சுங்கச்சாவடிகளில் சுங்கம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் பல கோடி வசூல் செய்கின்றனர். மக்களவையில் குறைகளை கூறினாலும் ஒன்றிய அரசு செவி சாய்ப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பிறகு அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் தடுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு சென்றனர்.

The post அமித்ஷா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: விஷ்ணு பிரசாத் எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: