×

பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு

சென்னை: பவானிசாகர் அணையிலிருந்து வரும் 25ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2024-2025-ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள 15743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 25.12.2024 முதல் 23.04.2025 வரை 120 நாட்களுக்கு மொத்தம் 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar dam ,Chennai ,Tamil Nadu government ,Kalingarayan ,Erode district ,
× RELATED பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு