×

சீர்காழியில் தாலுகா அலுவலகம் புதிதாக கட்ட வேண்டும்

சீர்காழி,டிச.24: சீர்காழியில் தாலுகா அலுவலகம் புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாசில்தார் அலுவலக கட்டிடம் இயங்கி வந்தது. அத்துடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடமும் இயங்கி வந்தது. நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தில் அலுவலகம் இயங்க முடியாது நிலை இருந்து வந்ததால் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு சீர்காழியில் உள்ள வாடகை கட்டிடத்தில் மாற்றப்பட்டு அலுவலகம் இயங்கி வருகிறது. பழமையான தாசில்தார் அலுவலக கட்டிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. ஆனால் 6 மாத காலமாக வாடகைக்கு கட்டிடத்தில் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. புதிய அலுவலக கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு திட்ட செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், சீர்காழி தாசில்தார் அலுவலக கட்டிடம் அங்கிருந்து மாற்றப்பட்டு பழமையான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அங்கு இயங்கி வந்த நீதிமன்றம், புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் இயங்கி வருகிறது. ஆனால் தாசில்தார் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆறு வருட காலமாக பழமையான வாடகை கட்டிடத்தில் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. பழமையான கட்டிடத்தில் இயங்கி வருவதால் பல்வேறு பணிகளுக்காக இங்கு செல்பவர்கள் போதிய வசதி இன்றி இருந்து வருவதால் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக புதிய தாசில்தார் அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

The post சீர்காழியில் தாலுகா அலுவலகம் புதிதாக கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Tahsildar ,Sirkazhi, Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED சீர்காழி நகராட்சி பகுதியில்...