×

வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க கோரிக்கை

களக்காடு வடக்கு பச்சையாறு அணை திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் கே.என்.நேருவிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார். களக்காடு ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முருகன் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனு விவரம்: களக்காடு பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் தினசரி பயிர்கள் நாசமாகி வருகின்றன. காட்டு பன்றிகளால் விவசாயிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், அவைகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers' Association ,State ,Vice President ,Perumpadayar ,Minister ,K.N. Nehru ,Kalakkadu ,North Pachaiyar Dam ,Kalakkadu Union ,Communist of ,India ,Murugan ,Kalakkadu… ,
× RELATED ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழக...