×

போதை மறுவாழ்வு மையத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி: ஊழியர்களிடம், போலீஸ் விசாரணை

புழல்: செங்குன்றத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட வாந்தி, பேதியால் ஆட்டோ ஓட்டுநர் பலியானார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சந்திரன்(40). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அண்மையில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தில் சந்திரன் இணைந்துள்ளார். இவர், மது போதைக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தினர் செங்குன்றத்தில் அமைந்துள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 20ம்தேதி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

நேற்று காலை சந்திரனுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகக்கூறி, போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள், அவரை கொளத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு, சந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போலீசார், சந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், போதை மறுவாழ்வு மையத்தில் அவரை தாக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், சந்தேக மரணம் பிரிவில் வழக்குபதிவு செய்த போலீசார், போதை மறுவாழ்வு மைய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post போதை மறுவாழ்வு மையத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி: ஊழியர்களிடம், போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Moon ,Chennai ,Vijay ,Dinakaran ,
× RELATED நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்…