×

பள்ளத்தில் இறங்கி ஏறியபோது பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பலி: ஆவடியில் சோகம்

ஆவடி: ஆவடியில் பள்ளத்தில் இறங்கி ஏறியபோது பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஆவடி, கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் சிவா(45), ஆவடியில் அமைந்துள்ள ஒன்றிய அரசு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் கிரிஜா(64) அரக்கோணத்தில் உள்ள இளைய மகன் வீட்டிற்குச் செல்வதற்காக நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு, தடம் எண் 77இ என்ற அரசுப் பேருந்தில் ஏறி பயணித்துள்ளார். காலை நேரம் என்பதால் பேருந்தில் 102 பெண்கள் உட்பட 136 பேர் பயணித்தனர்.

பேருந்தை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி(58) என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்து அஜய் ஸ்டேடியம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, ஆவடி உதவி ஆணையர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள ராட்சத பள்ளத்தில் பேருந்து இறங்கி ஏறியது. இதில் கிரிஜா பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் ஆவடி போலீசார் மற்றும் ஆவடி புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரிஜாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பள்ளத்தில் இறங்கி ஏறியபோது பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பலி: ஆவடியில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Avadi ,Siva ,Kovilpadagai ,Union ,Girija ,Arakkonam… ,
× RELATED ஆவடி மாமன்ற கூட்டத்தில் 119 தீர்மானம் நிறைவேற்றம்