×

அமித்ஷாவை கண்டித்து புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம்

பூந்தமல்லி அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், நிர்வாகிகள் காமராஜ், முல்லை பலராமன், தளபதி செல்வம், பாரதிதாசன், பழஞ்சூர் வின்சென்ட், மணவூர் ஜி.மகா, வழக்கறிஞர் ஸ்ரீதர், பரணி மாரி, கூடப்பாக்கம் குட்டி, வியாசை சிகா, தருமன், பூவை சரவணன், தொழுவூர் சீனிவாசன், சைமன்பாபு, தாமஸ் பர்னபாஸ், சேகர், ஆலை சிவலிங்கம், மணிமாறன், உமாதேவி, ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர். ரகுநாத், மதிவாசன், நாயப்பாக்கம் மோகன், வேணுகோபால், முத்துராமன், சிவராமன், வேதா, ராக்கெட் ரமேஷ் வரவேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் மகிமைதாஸ், பிரீஸ் பன்னீர், ரஞ்ஜித், தன்ராஜ், ஆதிவேந்தன், பாஸ்கர், குமார், முகப்பேர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அமித்ஷாவை கண்டித்து புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Revolutionary Bharat ,Amit Shah ,Egmore ,Union ,Home Minister ,Poonamalli Ambedkar ,Principal Secretary ,Rushendra Kumar ,Kamaraj ,Mullai Balaraman ,Commander ,Selvam ,Bharathidasan ,Palanjur Vincent ,Manavur… ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவை கண்டித்து புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம்..!!