நேற்று மீண்டும் தேடுதல் பணி தொடர்ந்ததில் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர். திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு அரையாண்டு இறுதி தேர்வு எழுதிய மாணவர்கள் குடமுருட்டி பகுதியில் உள்ள காவிரியாறு அய்யாளம்மன் படித்துறையில் இறங்கி குளித்தனர். சிலர் தெர்மாகோல் உதவியுடன் குளித்துக்கொண்டிருந்தனர். தெர்மகோல் திடீரென உடைந்ததால் ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் (15), விக்னேஷ் (16) ஆகியோர் நீரில் மூழ்கினர். இவர்களை காப்பாற்ற சிம்பு என்பவர் இறங்கினார். அவரும் மூழ்கினார்.
The post வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 3 சகோதரர்கள் பலி ஆற்றில் மூவர் மூழ்கினர் appeared first on Dinakaran.