×

ராமேஸ்வரம் கோயிலில் படியளத்தல் நிகழ்ச்சி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்


ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் இன்று காலை எழுந்தருளி அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனால் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோயிலில் மார்கழி மாத அஷ்டமி பூப்பிரதஷிணம் படியளத்தல் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 3.30 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை, சுவாமி-அம்பாள் சன்னதிகளில் கால பூஜை ஆகியவை நடைபெற்றன. காலை 7 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல் நடைபெற்றது.

இதையடுத்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் எழுந்தருளி நகரில் வலம் வந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனால் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் பக்தர்கள் தீர்த்தமாடுதலும் நிறுத்தப்பட்டது. வீதி உலா முடிந்து சுவாமிகள் திரும்பியபின் கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து சுவாமி, அம்பாள் சன்னதியில் உச்சி கால பூஜை நடைபெற்றது. படியளக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post ராமேஸ்வரம் கோயிலில் படியளத்தல் நிகழ்ச்சி: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Rameshwaram Temple ,Rameswaram ,Rameswaram Temple ,Ramanathaswamy ,Parvadavarini ,Ambala ,Pancha Murthy Saqitam ,
× RELATED ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறப்பு?