ஆனால் நமது பாரம்பரியத்தின் மீது நாட்டு மக்கள் பெருமைப்படும் போதுதான் உலகம் அதை அறியும். தற்போதைய உலகமயமாக்கல் காலத்தில் தொழில்நுட்பமும், பாரம்பரியமும் ஒன்றாக பயணிக்க வேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் தவிர்க்க முடியாதது. ஆனால் அது தனது பாரம்பரியத்தை இழக்காமல் அதை செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையிலேயே உலகின் முன்னணி சக்தியாக வெளி வர முடியும்.
சுதந்திரம் என்பதை நடுநிலையுடன் ஒருபோதும் குழப்பிக் கொள்ளக் கூடாது. எங்களின் தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதை பயப்படாமல் நாங்கள் செய்வோம். இந்தியாவின் விருப்பங்களில் வேறு யாரும் அதிகாரம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது. நமது பாரம்பரியத்தையும், மரபுகளையும் நிராகரிப்பதன் மூலமே முன்னேற்றம், நவீனத்துவத்தை எட்ட முடியும் என நீண்டகாலமாக நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டோம். இது இறக்குமதி செய்த மாடலாக இருக்கலாம்.
ஆனால் இப்போது இந்தியா தனது சொந்த ஆளுமையை கண்டுபிடித்து மீண்டும் சரியான பாதையில் பயணிக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் நமது பாரம்பரியத்தின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்திருப்பது அவசியம். இன்று இந்தியா முக்கியமான கட்டத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நமது திறன், நம்பிக்கை, பரந்த அளவில் முன்னேறுவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை நிரூபிக்கப்பட்டுள்ளது. இது, வறுமை, பாகுபாடு மற்றும் வாய்ப்புகள் இல்லாமை போன்ற பழமையான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை காட்டுகிறது. இவ்வாறு கூறி உள்ளார்.
The post யாரும் தலையிட அனுமதிக்க மாட்டோம் தேச நலனுக்காக சரியானதை செய்ய பயப்பட மாட்டோம்: ஜெய்சங்கர் திட்டவட்டம் appeared first on Dinakaran.