கொடைக்கானல், டிச. 21: கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மலை கிராமமக்கள் பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்று எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்து அதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் ஸ்வேதா ராணி கணேசன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மா.கணேசன், ஒன்றிய செயலாளர் கருமலைபாண்டியன் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் நாகராஜ் (எ) சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் திலீப்குமார், ஒப்பந்ததாரர் டேனியல் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post கொடைக்கானல் தாண்டிக்குடியில் பயணிகள் நிழற்குடை அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.