குன்னத்தில் ஒன்றிய அமைச்சரை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

 

குன்னம், டிச.20: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இழிவாக பேசியதாக பெரம்பலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குன்னம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவிவிலகவேண்டும். பொது மக்களிம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மேலிடப் பொறுப்பாளர் வழக்கறிஞர் மு.தனகோடி, மாநில செயலாளர் வீர.செங்கோலன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் மு.உதயகுமார், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குன்னத்தில் ஒன்றிய அமைச்சரை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: