ராஜசேகர பாண்டியனிடம், ‘‘மணிகண்டன் எய்த அம்பு உள்ள இடத்தில் கோயில் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள். அவர் தங்களுக்கு வழங்கிய உபதேச முறைப்படி, வழிபாட்டு முறைகளை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
கோயில் அமைக்கும் முன்பாக, முதலில் குருபூஜை (பிரம்மச்சாரி), பின்னர் பித்ருபூஜை, தேவபூஜை, அதிதி (காலம்) பூஜை மற்றும் ஆத்ம பூஜை வழிபாடுகளை முறையாக செய்ய வேண்டும். ஐயப்பனை காண செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விரதமுறைகள், வழிபாட்டு முறைகள், மந்திரங்கள் உள்ளிட்ட ஐயப்பன் வழிபாட்டு முறையை முழுமையாகப் பின்பற்றவேண்டும்’’ என விளக்கி கூறினார்.
அதனை ஏற்றுக்கொண்ட மன்னர், வருத்த மனநிலையில் இருந்து வெளியேறி இயல்புநிலைக்கு திரும்பினார்.
பிறகு அகத்தியரின் வழிபாட்டு நெறிமுறைகளை கேட்க துவங்கினார். அகத்திய முனிவர் தொடர்ந்து மன்னரிடம், ‘‘பொன்னம்பலத்தில் தர்மசாஸ்தாவிற்கு தேவர்கள், முனிவர்கள், தேவதைகள் ஆகாய கங்கையை கொண்டு நாள்தோறும் அபிஷேகம் செய்கின்றனர். பந்தளத்தில் ஓடும் அந்த குளிர்ந்த அபிஷேக நீரானது தேங்கிய இடம் கும்ப தளம் என அழைக்கப்படுகிறது. அதில் நீராடி, உடலையும், ஆத்மாவையும் தூய்மைப்படுத்தி, ஐம்புலன்களையும் அடக்கி தெய்வீக தன்மைக்கு மாறி முதலில் நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு மணிகண்டன் பம்பா நதிக்கரையில் அவதரித்து, தங்களுக்கு குழந்தையாக கிடைக்கும்போது அணிந்திருந்த மணிகள் கோர்க்கப்பட்ட துளசி மாலையுடன், ருத்ராட்ச மாலையை அணிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் ஐயப்பன் நம்முள் ஐக்கியமாகி விட்டதாக பொருள். இதனால் மணிகண்டன் கூறியபடியே, ‘நீ, நானாக ஆவதால் நீயும் கடவுள் ஆகிறாய்’ என்ற தத்துவத்திற்கு இணங்க நாமும் கடவுள் ஆகிறோம்.
இதனால் ஐயப்பனுக்கு மாலை அணிந்தவுடன் மன்னராக இருந்தாலும் அனைத்து சுகபோக வாழ்வை துறந்து, எளிமையான வாழ்வை ஏற்று, முழு பிரம்மச்சரியத்தை கடைபிடித்து உடலையும், மனதையும் பக்குவப்படுத்தும் விரதமுறை மேற்கொள்ளவேண்டும்’’ என எடுத்துரைத்தார். சாமியே சரணம் ஐயப்பா
(நாளையும் தரிசிப்போம்).
சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு
The post ஐயப்பன் அறிவோம் 36: சுவாமி ஐயப்பன் appeared first on Dinakaran.