×

மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம் தனிப்படை போலீசார் கேரளா விரைவு

நெல்லை, டிச.20: நெல்லையில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தில் சுத்தமல்லியைச் சேர்ந்த மாயாண்டி, மனோகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மனோகர் என்பவர் கொண்டாநகரம் பேருந்து நிலைய நிறுத்தத்தில் மீன்கடை நடத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் அவரது மகன் தற்போது தலைமறைவாகி உள்ள நிலையில் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.மேலும் மாயாண்டி, மனோகரின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மாயாண்டி, மனோகருடன் தொடர்பில் இருந்த கேரளாவைச் சேர்ந்தவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்ய நேற்று கேரளாவிற்கு விரைந்தனர். இதனால் மருந்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த பலர் சிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம் தனிப்படை போலீசார் கேரளா விரைவு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Nellai ,Mayandi ,Manohar ,Suttamalli ,Kondanagaram ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கேரள கழிவுகளை கொட்டிய 2 பேர் கைது