புதுடெல்லி முதல்வர் அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் ஆளும் ஆம் ஆத்மி 70 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து, பிரசார வேலைகளில் இறங்கிவிட்டது.
இந்நிலையில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது:
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ‘சஞ்சீவனி’ திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனை மட்டுமின்றி, அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை வழங்கப்படும். அதற்கான செலவில் உச்ச வரம்பு எதுவும் இருக்காது. இதற்கான பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும். ஆம் ஆத்மி கட்சியினர், உங்கள் வீட்டிற்கு வந்து பதிவு அட்டையை தருவார்கள். அதை பாதுகாப்பாக வைத்திருங்கள். தேர்தலுக்கு பின் ஆட்சிக்கு வந்ததும், இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தனியார் மருத்துவமனையில் முதியவர்களுக்கு இலவச சிகிச்சை: அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி appeared first on Dinakaran.