அப்போது காமாட்சியிடம் அவரது தாய் மீரா செல்போனில் பலமுறை அழைத்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் மருமகன் மணிகண்டனை தொடர்புகொண்டு மகள் போனை எடுக்காத தகவலை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து மணிகண்டன் உடனடியாக வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை திறக்காததால் உடைத்து உள்ளே சென்றபோது மின் விசிறியில் புடவையை கட்டி காமாட்சி தூக்கில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை உடனடியாக மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு, காமாட்சி ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.
இதுசம்பந்தமாக வேளச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து காமாட்சி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நேற்று காமாட்சிக்கும் அவரது மாமியார் பொம்மி ஆகியோர் இடையே மணிகண்டனின் செயினை யார் அணிந்துகொள்வது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி திட்டியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த காமாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது.
The post செயின் அணிவதில் போட்டா போட்டி மாமியாருடன் ஏற்பட்ட வாக்குவாதம்; கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை appeared first on Dinakaran.