செங்கல்பட்டு: பரங்கிமலை ஜிஎஸ்டி சாலையில உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை, தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்து இருந்தது. செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவில்பேரில், பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், கடந்த ஜூலை மாதம் இந்த 3 ஏக்கர் நிலத்தை மீட்டனர். இதற்கிடையில் அரசு கைப்பற்றிய இடத்தில், 1 ஏக்கர் நிலத்தை கல்லூரி நிர்வாகம் மீண்டும் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருவதை வருவாய் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், நேற்று சம்பவ இடத்திற்கு வந்து, அரசு நிலத்தில் தனியார் கல்லூரி நிர்வாகம் அமைத்து இருந்த இரும்பு தடுப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி, நிலத்தை கைப்பற்றினர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.