மேலும், பள்ளியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் தருவாயில் இருந்தது. இந்நிலையில், இக்கட்டிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. அதன் பிறகு, இதுவரை சுற்றுச்சுவர் அமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்திற்குள் பகல் நேரங்களில் கால்நடைகள் உலா வந்து மாணவ-மாணவிகளை அச்சுறுத்தி வந்தன. அதுமட்டுமல்லாமல், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மற்றும் மதுபிரியர்களின் கூடாரமாக பள்ளி வளாகம் மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, மாணவர்களின், பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து, கடந்த நவம்பர் 25ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, அங்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து, செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
The post கொக்கிலமேடு அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்: மாணவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.