- வாலாசல்பட்டி ஏரி
- Kengavalli
- நாமக்கல் மாவட்டம்
- கொல்லிமலை, சேலம் மாவட்டம்
- கிருஷ்ணபுரம் ஊராட்சி பகுதி
- வாசக்கல்பட்டி ஏரி
- வலசகல்பட்டி ஏரி
- தின மலர்
கெங்கவல்லி : நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் தொடர் கனமழை காரணமாக, சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள வலசக்கல்பட்டி ஏரி முழு கொள்ளளவான 46 அடியை எட்டி நிரம்பியது.
கடந்த வாரம் முதல் உபரி நீர் வெளியேறி வரும் நிலையில், தற்போது கூடுதலாக தண்ணீர் வருவதால், பொதுப்பணி துறையினர் 1200 கனஅடி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். நீர் நிரம்பி வெளியேறும் பகுதியில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆழமான பகுதியில், ஆபத்தை உணராமல் நீரில் இறங்கி மீன் பிடிக்கின்றனர்.
இதையடுத்து, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி உத்தரவின் பேரில், கெங்கவல்லி தாசில்தார் (பொ) ஈஸ்வரி, கெங்கவல்லி எஸ்ஐ கணேஷ்குமார் தலைமையில், வலசக்கல்பட்டி ஏரிக்கு சென்று, அங்கு மீன் பிடித்து கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தனர். பின்னர், வலசக்கல்பட்டி ஏரிப்பகுதியில், கெங்கவல்லி போலீசார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post ஆபத்தை உணராமல் வலசக்கல்பட்டி ஏரியில் மீன் பிடித்தவர்கள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.