×

முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் வெளியேற்றம்

சென்னை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்று காலை 10.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 22.76 அடியாகவும், கொள்ளளவு 3315 மில்லியன் கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 2450 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக (Flood Moderation in Adayar River) ஏரியிலிருந்து நேற்று காலை 10.30 மணி அளவில் வினாடிக்கு 4500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று பிற்பகல் 12.00 மணி அளவில் வினாடிக்கு 6,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும். எனவே, ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனுர், குன்றத்துர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,Chennai ,Kundrathur ,Kanchipuram district ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு...