- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பெஞ்சல் புயல்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- மாநில அவசர செயல்பாட்டு மையம்
- எசிலாகம், சென்னை
- பென்ஜால்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபின் நிருபர்களிடம் கூறியதாவது:
* கேள்வி: தென் மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
* முதல்வர் பதில்: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது. அதற்கு ஏற்கனவே இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தி அதை மேற்பார்வையிடுவதற்காக இங்கிருந்து மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, நிவாரண பணிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக ஏதும் செய்தி கிடையாது. எது வந்தாலும் அதை சமாளித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது.
* கேள்வி: அமைச்சர்கள் கண்காணிப்பு பணிகளில் இருக்கிறார்களா?
* பதில்: தென்காசி பகுதிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அனுப்பி வைத்திருக்கிறோம். திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் அமைச்சர் நேரு ஏற்கனவே சென்று வந்திருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் மழை பெய்துள்ளதால் அங்கு வந்தவரை திருநெல்வேலியில் மறுபடியும் மழை பெய்துள்ளதால் அவரை அங்கு அனுப்பியிருக்கிறோம்.
* கேள்வி: பேரிடர் நிதியை (பெஞ்சல் புயல், மழை பாதிப்புக்காக) ஒன்றிய அரசிடம் இருந்து தொடர்ந்து நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நேற்று கூட நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசியிருந்தார்கள். குறைவாகவே தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தருகிறார்கள். அதுபற்றி…
* பதில்: ஊடகத்தில் இருக்கக்கூடிய நீங்கள் எல்லாம் அதனை தொடர்ந்து எழுதினீர்கள் என்றால், அதுவே பெரிய அழுத்தமாக இருக்கும்.
* கேள்வி: ஏற்கனவே வழங்கிய நிதி போதுமானதாக இருக்கிறதா?
* பதில்: அது எப்படி போதும். போதுமானதாக இல்லை.
* கேள்வி: ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இது என்ன மாதிரியான எதிரொலியாக பார்க்கப்படுகிறது.
* பதில்: நேற்று முன்தினமே தெளிவாக அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது. எங்களால் முடிந்தவரைக்கும் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post பெஞ்சல் புயல், மழை பாதிப்பு நிவாரணமாக ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி appeared first on Dinakaran.