×

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம், மாநகராட்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (30), மாரியம்மாள் (50), தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்த சுருளி (50), சுப்புலட்சுமி (45), திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச்சேர்ந்த ராஜசேகர் (36), கோபிகா (6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன் ரூ.3 லட்சமும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

The post திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Dindigul district ,Manimurugan ,Mariammal ,Thadikombu Balathipathi Nagar ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் தீ விபத்தில்...