திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து பலியானவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல் மாநகரின் திருச்சி சாலையில் இருந்த தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒரு குழந்தை உள்பட 7 பேர் மரணமடைந்தனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 4 மாடி கொண்ட மருத்துவமனை கட்டிடத்தில் விபத்து கால நெருக்கடிகளை எதிர் கொள்ளும் வசதியும், விபத்து கால தடுப்பு சாதனங்கள் எளிதில் கையாளும் வசதியும் இருந்ததா என்பதை விசாரிக்க வேண்டும். விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பங்களுக்கு மருத்துவமனை நிர்வாகமும், அரசும் உரிய இழப்பீடு வழங்கி உதவ வேண்டும்.

* செல்வப்பெருந்தகை: திண்டுக்கல் தனியார் மருத்துவமனை மின்தூக்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள் அரசின் சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பதை தமிழக அரசின் மருத்துவத்துறை ஆய்வு செய்ய வேண்டும். இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். தீ விபத்தில் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும். தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து பலியானவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: முத்தரசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: