மகிஷி ஒழிந்த மகிழ்ச்சியில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மணிகண்டனுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது, தாயின் தலைவலி நோய் தீர்க்க புலிப்பாலுடன் செல்லவிருப்பதை தெரிவித்தார். அப்போது சிவபெருமானின் ஆணைப்படி, சாஸ்தாவான தங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும்விதமாக, மந்திரி, போலி வைத்தியருக்கு பாடம் புகட்டுவதற்கு தான் ஒரு ஆண்புலியாகவும், தேவதை ஒருவர் தாய்மையடைந்த பெண் புலியாகவும், மற்ற தேவர்கள், தேவதைகள் ஆண், பெண் புலிகளாகவும், புலிக்குட்டிகளாக உருமாறி உங்களுடன் வருகிறோம்.
உங்கள் வளர்ப்பு தாயான ராணியின் தலைவலி நாடகத்திற்கு புலிப்பால் கொண்டு செல்லுங்கள் என்றார் இந்திரன். அதனை ஏற்று காட்டிலிருந்து ஆண் புலி(இந்திரன்) மீது அமர்ந்து சபரிமலை காட்டிலிருந்து பந்தள அரண்மனைக்கு புலிப்படைகளுடன் ஊர்வலமாக வந்தார் மணிகண்டன். இதனைக்கண்ட மன்னர், மந்திரி, போலி வைத்தியர் என அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இருந்தாலும் மன்னர் ராஜசேகரபாண்டியன், ‘‘மணிகண்டா… நீ எனது மகனாக இருந்தாலும் உனது வீர, தீர செயல்கள் ஒவ்வொன்றும், மனிதத்தன்மைகளிலிருந்து வேறுபட்டு தெய்வீகத்தன்மையை கொண்டுள்ளது.
நீ புலியை தேடி காட்டிற்கு சென்றதும், உன் தாயின் தலைவலி காணாமல் விட்டது. தற்போது உன்னுடைய நிலையை பார்த்ததும், மகன் என்பதை கடந்து, உனது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற தோன்றுகிறது. காரணம் எப்போதும் இல்லாத அளவிற்கு தெய்வீகத்தன்மையுடன் கூடிய வசீகரிக்கும் ஒளி வட்டம், ஜோதி வடிவமான உனது முகத்தில் இறைவனின் தோற்றம் தெரிகிறது என்றார்.
அந்த நேரத்தில் அரண்மனைக்கு வருகிறார் அகஸ்திய முனிவர்.
அப்போது மணிகண்டனை பம்பா நதிக்கரையில் குழந்தையாக கண்டெடுக்கும்போது, ‘‘இந்த குழந்தை யார் என்று ஆராய வேண்டாம். குழந்தை 12 வயதை அடையும்போது, யார் என்று உனக்கு தெரிய வரும் என ஒரு முனிவர் சொன்னது மன்னருக்கு நினைவிற்கு வந்தது. அதன்படி, ‘‘அகஸ்திய முனிவரே… நடப்பது ஒன்றும் புரியவில்லை. ஆனால் இவை அனைத்தும் நான் வணங்கும் குல தெய்வம் சிவனின் திருவிளையாடல் என்பது மட்டும் புரிகிறது. மணிகண்டன் யார் என தாங்களாவது கூற வேண்டும்’’ என்கிறார். சாமியே சரணம் ஐயப்பா
(நாளையும் தரிசிப்போம்…)
* சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு
The post ஐயப்பன் அறிவோம் 30: புலி மீது உலா appeared first on Dinakaran.