×

செர்லாக்கினால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் அபாயமா? தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கேள்வி

சென்னை: குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி மக்களவையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவாக இந்தியாவில் விற்கப்படும் நெஸ்லே செரலாக் ஒரு ஸ்பூன் பவுடரில் 2.7 கிராம் சர்க்கரை இருப்பதாகவும் அதே உணவுப்பொருள் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் சர்க்கரை சேர்க்கப்படாமல் விற்கப்படுகிறது எனவும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதை குறிப்பிட்டு பேசிய அவர், மிக இளவயதில் குழந்தைகளுக்கு உடல் பருமன் மற்றும் நாட்பட்ட நோய்களை உண்டாக்கும் அபாயம் இருப்பதால் இரண்டு வயதுக்குமுன் குழந்தைகள் உணவில் சர்க்கரை சேர்க்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு (கீபிளி) அறிவுறுத்துகிறது. அதன் அடிப்படையில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்ட சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மட்டுமல்லாமல் உலகளாவிய சுகாதாரப் பரிந்துரைகளுக்கு இணங்க குழந்தைகளுக்கான உணவுகள் தயாரிக்க தரநிலைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

The post செர்லாக்கினால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் அபாயமா? தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi M. ,Chennai ,Dimuka Parliamentary Committee ,Kanimozhi Malakawai ,India ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED பொங்கல் முடிந்து திரும்புபவர்களால்...