×

மனநல பாதித்தவர்களை கையாளும் திறன் பயிற்சியின் நிறைவு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார் கூடுதல் ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட மனநல பாதித்தவர்களை கையாளும் திறன் பயிற்சியின் நிறைவு சான்றிதழ்களை கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் வழங்கி சிறப்பித்தார். சென்னை பெருநகர காவல் துறையில் காவல் கரங்கள் உதவி மையம் கடந்த 21.04.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டு இதுவரை சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு வீடுகளற்ற நபர்களை காவல் துறையினர் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மூலம் மீட்டு அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் அவர்களின் உறவினர்களை கண்டறிந்து குடும்பத்துடன் சேர்த்து வைப்பது, உறவினர்களற்ற நபர்களை பெருநகர சென்னை மாநகராட்சி காப்பக இல்லங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன இல்லங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு உதவி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை உரிய மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்து கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் (கைப்பேசி எண். 94447 17100) மூலம் கிடைத்த 7,584 வீடற்று, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் 5,228 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டும், உறவினர் அறிந்து 1178 பேர் அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும். 869 நபர்கள் மனநிலை பாதித்த நிலையில் உரிய மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டும், 309 நபர்கள் பல்வேறு உடல்நிலை கோளாறுகளால் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுமதித்து உதவியும் வருகின்றது. உரிமை கோரப்படாத உறவினர்களற்ற 4,472 இறந்தவர்களின் உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உணவு தேவைப்படும் வீடுகளற்ற அரசு மற்றும் தன்னார்வ இல்லங்களில் உள்ளவர்களுக்கு சுமார் 2,02,794 உணவு பொட்டலங்கள் உதவி வாகனம் மூலம் சேகரித்து வழங்கப்பட்டுள்ளது. காவல்கரங்கள் மீட்பு பணியில் மனநலம் பாதித்த நபர்களை மீட்கும் போது, தேவைப்படும் அடிப்படை அடையாளகாணும் முறை உத்திகள், முறையான சட்ட வழிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதல்கள் குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் காவல் கரங்கள் மீட்பின் போது, காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி மனநல பாதிப்படைந்தவர்களுக்காக Banyan (பேனியன்) தன்னார்வ தொண்டு அமைப்பு HCL Foundation உதவியுடன் 3 மாத Diploma Certificate course பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு காவல் ஆணையரகத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இப்பயிற்சியில் சென்னை பெருநகர காவல் 12 காவல் மாவட்டங்களிலிருந்து காவல் துறையினர் பங்கேற்க வைக்கப்பட்டனர். இதில் 30 காவல் ஆளிநர்கள் மற்றும் 30 தன்னார்வலர்கள் என 60 நபர்கள் பங்கேற்றனர். பல்வேறு சிறப்பு நிபுணத்துவம் கொண்ட பயிற்றுநர்கள் வகுப்புகள் எடுத்தனர். மேற்கண்ட பயிற்சி 21.09.2024 அன்று துவங்கப்பட்டு 12 வாரங்களாக நடைபெற்று இன்று (13.12.2024) பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில் குமார் சரட்கர் பயிற்சி நிறைவு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

The post மனநல பாதித்தவர்களை கையாளும் திறன் பயிற்சியின் நிறைவு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார் கூடுதல் ஆணையாளர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Police ,Police Support Center ,Chennai Metropolitan Police Department ,
× RELATED பொதுமக்களின் மனுக்களை பெற்று...