×

விருகம்பாக்கம் கூவத்தில் தவறி விழுந்த பெண் காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு


சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் கூவத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-1, முதல் நிலை காவலர் B.வினோத் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பு அதிவிரைவுப் படை (Special Action Group) பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இன்று (13.12.2024) காலை விருகம்பாக்கம், நடேசன் தெரு பகுதியில் பணியிலிருந்த போது, அருகில் உள்ள கூவம் ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்துள்ளார்.

பெண்ணின் சத்தம் கேட்டு அருகில் பணியிலிருந்த காவலர் வினோத் விரைந்து செயல்பட்டு, அருகிலிருந்த JCBயை வரவழைத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மேற்படி பெண்ணை JCB உதவியுடன் மீட்டு முதலுதவி அளித்துள்ளார்.

விசாரணையில் கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண் தேவி, வ/40, க/பெ.சக்திவேல், அம்மன் கோயில் தெரு, நெற்குன்றம், அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் என்பது தெரியவந்தது. தேவியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். உயிருக்கு போராடிய பெண்ணை துணிச்சலாக செயல்பட்டு தக்க சமயத்தில் காப்பாற்றிய காவலரை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாரட்டினர்.

கூவம் ஆற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை தக்க சமயத்தில் காப்பாற்றி முதலுதவி அளித்த முதல் நிலை காவலர் B.வினோத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் அவர்கள் இன்று (13.12.2024) நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டி வெகுமதி வழங்கினார்

The post விருகம்பாக்கம் கூவத்தில் தவறி விழுந்த பெண் காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Viragambakkam Kowwa ,Chennai ,Chennai Metropolitan Police ,Commissioner ,Virugambakkam ,Armed Force-1 ,Guard ,B. Vinod ,Vrikambakkam Gowah ,
× RELATED பொதுமக்களின் மனுக்களை பெற்று...