சென்செக்ஸ் 843 புள்ளிகள் உயர்வு

மும்பை: வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 1.48% சரிந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் பிற்பகலில் 1% உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் முற்பகலில் 1,207 புள்ளிகள் சரிந்து 80,082 புள்ளிகளுக்கு சரிந்தது. நண்பகலில் உயரத் தொடங்கிய சென்செக்ஸ் 924 புள்ளிகள் வரை உயர்ந்து இறுதியில் 843 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது. தொடக்க நேர சரிவான 80,082 புள்ளிகளில் இருந்து 2,131 புள்ளிகள் உயர்ந்து 82,214 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 220 புள்ளிகள் உயர்ந்து 24,768 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெருத்தது.

The post சென்செக்ஸ் 843 புள்ளிகள் உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: