இதையடுத்து பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி நிலத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, பந்தலூர் தாசில்தார் மற்றும் பிடிஓ ஆகியோருக்கு புகார்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5 ம் தேதி வருவாய்துறை சார்பில் நில அளவை செய்து தங்கள் பணியை நிறைவு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்திற்கு வருவாய்த்துறையினர் சிட்டா, அடங்கல் வழங்கியும் நில வரியும் பெற்று தந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வரும் கழிப்பிடத்தை ஒட்டி ஆக்கிரமிப்பாளர் வேலி அமைத்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பள்ளிக்கு உரிய நிலத்தை புல தணிக்கை மற்றும் உட்பிரிவு செய்து தர வேண்டும் என கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம், பந்தலூர் தாசில்தாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் மீண்டும் நில அளவை செய்து பள்ளிக்குறிய நிலத்தை ஒப்படைக்கா விட்டால் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
The post அரசு பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு? மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடம் அருகே வேலி அமைத்ததாக சர்ச்சை appeared first on Dinakaran.